கோவை விழாவை முன்னிட்டு கோவை வாலாங்குளம் பகுதியில் நடைபெற்ற லேசர் ஷோ பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கோவை விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவை விழாவின் 15வது நிகழ்வு நடைபெறுகிறது.
லேசர் விளக்குகள் காட்சி
இந்த நாட்களில் மாவட்டம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் உக்கடம் பகுதியில் உள்ள வாலங்குளத்தில் லேசர் விளக்குகள் காட்சி, இசைக்கு ஏற்ப நடனமாடும் நீரூற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். இசைக்கு ஏற்ப பிரம்மாண்டமான முறையில் நடனமாடிய நீரூற்றும், வண்ண விளக்குகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
வரும் 8ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த லேசர் ஷோ வாலாங்குளத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



