மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட் டுமே ஆக்கப்பூர்வமான பங்கினை அளிக்க இயலும் தரமான மருத்துவ வசதிகளைப் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நோய் தடுப்பு பணிகளிலும் நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்தி நலமான சமுதாயத்தை உருவாக்க பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் இதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான உயர்தர சிகிச்சைகள் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையின் வாயி லாக கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் அனைத்து கிராம பகுதிகளிலும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 05.08.2021 அன்று ‘மக் களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்திட்டத்தின் மூலம் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங் களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந் தைகளின் பிறவிக் குறைபாடு களைக்கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் பரிசோதனை மூலமாக 3,15,629 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 1,78,904 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 1,53,470 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை 1,95,887 நபர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்துப் பெட்டகங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.
முதுகு தண்டுவடம் செயலி ழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறு நீரக நோயாளிகளைப் பராம ரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கென வட்டார அள வில் நியமிக்கப்பட்டுள்ள பிசி யோதெரபிஸ்ட் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 21,848 நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர் கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 21,359 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான நோய் தடுப்புமருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
6 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கோயம் புத்தூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,48,003 நோயாளிகள் கண் டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நோயாளியின் விபரம் சமுதாய நலப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்த நஞ்சுண்டாபுரம் சேர்ந்த பயனாளி மயிலாத்தாள் (வயது 74) மருமகள் கௌசல்யா தேவி தெரிவித்ததாவது:
கடந்த 7 வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப் பட்டு மாமியார் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சிறுநீர்குழாய் பொருத்தப்பட்டது. தனியார் மருத்துவமனை சென்று அவ்வப்போது அதனை மாற்றி வந்தோம். வயதான அவருக்கு இந்த அலைச்சல் மிகுந்த வேதனையைக் கொடுத்தது.
முதல்வர் துவக்கி வைத்த ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் வீட்டிற்கே செவிலியர் மற்றும் மருத்துவர் வந்து மாமியாரை பரிசோதனை செய்து, சிறுநீர் குழாய் மாற்றி விடுகிறார்கள். இதனால் அலைச்சல் இல்லாமல், சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நீரிழிவு நோயாளியான மாமனார், மாமியார் இருவருக்கும் மாத்திரைகள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறார்கள். இத்திட்டத்தை தந்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்த ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த பயனாளி செல்வன் சுஜீத் சந்திரன் (வயது 30) தெரிவித்ததாவது:
தாயாருடன் வசித்து வருகிறேன். பட்டப்படிப்பை 2015-ல் முடித்தேன். கடந்த 2019-ம் ஆண்டு மிகுந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டேன்.
ஆனால் சில மாதங்களில் என்னுடைய உடல்நிலை மிகவும் பலவீனம் அடைந்து நடக்கமுடியாத நிலைக்கு ஆளானேன். என்னை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டுவடம் மற்றும் அனைத்து மூட்டுகளிலும் செயல் இயக்க பாதிப்பு அதிகமாக இருப்பதினால் நடப்பதற்கு மிகவும் சிரமம் என்று கூறிவிட்டனர்.
தொடர் சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத காரணத்தால் நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. படுக்கை நிலைக்கு தள்ளப்பட்டேன். அன்றாட தேவைகளை நானே செய்துகொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
நாங்கள் தவித்தபோது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பேலியேட்டிவ் செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவர் வீட்டிற்கே வந்து மருத்துவ உதவிகளையும் ஆலோசனைகளையும் அளித்தார். அவர்கள் கூறியவாறே பல்வேறு விதமான உடல் பயிற்சிகளைச் செய்து வந்தேன்.
சிகிச்சையின் பலனாக முதலில் நான் ஒரு வருடத்தில் நிற்க ஆரம்பித்தேன். பிறகு நடைவண்டி உதவியுடன் நடக்க பயிற்சி அளித்தனர். அதன்பின்னர் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நான் நடப்பேன் என்ற நம்பிக்கை வந்தது. தற்போது என்னால் நடைவண்டி உதவியின்றி சிறிது நேரம் நடக்க முடிகிறது.
எனது அன்றாட வேலைகளை என்னால் செய்துகொள்ள முடிகிறது. இத்திட்டத்தின் கீழ் என்னை சமூகத்தில் சமமனிதாக மாற்றி, எனக்கு மறுவாழ்வு அளித்து, வீடு தேடி வந்து மருத்துவ உதவி அளிக்க காரணமாக இருந்த இந்த திட்டத்தை தந்த முதல்வருக்கு நன்றி என்றார்.
தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கி. மோகன்ராஜ்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்தூர் மாவட்டம்.



