கோவையில் ஹைகான் சோலார் வாட்டர் ஹீட்டர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் சோலார் வாட்டர் ஹீட்டர்கள் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்கள் சிலவற்றுள் ஹைக்கான் நிறுவனமும் ஒன்றாகும்.
காலத்திற்கு ஏற்ப வீடுகளுக்கு தொழில் துறை, கமர்ஷியல் இவற்றுக்கு ஏற்ற சோலார் வாட்டர் ஹீட்டர்களை புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பங்களுடன் நாங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்து வந்தோம்.
2023ம் ஆண்டில், ஹைகான் புதிய அளவிலான செலவு குறைந்த மற்றும் உயர்தர உள்நாட்டு சோலார் வாட்டர் ஹீட்டர் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. புதிய மாடல் புளூட்டோ பிளஸின் வெறும் 15,970 இல் தொடங்குகிறது.
(ஜி.எஸ்.டி உட்பட) சந்தையில் மிகக் குறைந்த விலை, சந்தையில் விலை குறைவாக இருந்தாலும் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி இவற்றை முன்னிறுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எங்கள் புதிய மாடல்கள் வழக்கமான அதே உயர்தர பொருட்களால் புதுப்பிக்கப்பட்ட உற்பத்தி செயல் முறைகளுடன் தயாராகின்றன. 4 புதிய மாடல் சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு புளூட்டோ, முன், ஜூபிடர் மற்றும் டர்போ – டி என பெயரிடப்பட்டு உள்ளது. குறைந்த விலையில் உயர்தர சோலார் வாட்டர் ஹீட்டரை மக்கள் தேர்வு செய்யலாம்.
மேற்கண்ட தகவலை ஹைகான் நிர்வாக இயக்குநர் கிரிஷ்டோ ஜார்ஜ், இயக்குநர் ஜார்ஜ் கிரிஷ்டோ, உதவி தலைவர் மகேஷ்வரன், விற்பனை அதிகாரி விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.



