fbpx
Homeபிற செய்திகள்கோவை இதயங்கள் அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது

கோவை இதயங்கள் அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது

தமிழ்நாடு மருத் துவ கவுன்சில் விருது, கோவையில் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையில் செயல்படும் ‘இதயங்கள் அறக்கட்டளைக்கு’ வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் 2023-ம் ஆண்டு சிறந்த மருத்துவ சேவைக்கான விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் கடந்த 27-ம் தேதி நடந்தது.

தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவைக்காக, கோவையில் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதனுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விருது வழங்கி பாராட்டினார்.

மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையின் கீழ் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,200 ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உயர்தர இன்சுலின், சர்க்கரை பார்க்கும் குளுக்கோமீட்டர் சாதனம் , இன்சுலின் பம்ப் , வலி குறைவான 4 எம்எம் ஊசி, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல உதவிகள் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:
கோவையில் தொடங்கிய இதயங்களின் பணி இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்துடன் (தமிழ்நாடு பிரிவு) இணைந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட காரணமாக செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள விருது இதயங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமான “தமிழகத்தில் முதல் வகை சர்க்கரை குறைபாடு கொண்ட ஒரு குழந்தை கூட தரமான மருத்துவமின்றி இன்னல் படக்கூடாது என்ற உயர் எண்ணத்திற்கு ஊன்றுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் வகை சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த 20 வயதுக்குட்பட்டவர்கள் உதவி பெற, இதயங்கள் அறக்கட்டளையை 9042858882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதயங்களின் வலைத்தளம் www.idhayangal.org http://www.idhayangal.org/ இவ்வாறு மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img