கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், கல்லூரி மாணவர் களுக்கான யுகன்டா” 25 நிகழ்வு நடைபெற்றது., முதல்வர் மற்றும் புலமுதன்மையர்கள் நிகழ்வினைத் திருவிளக்கு ஏற்றித் துவங்கி வைத்தனர்.
இந்நிகழ்விற்கு கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமைத் தாங் கினார். தொடக்க விழா நிகழ்வைத் தொடர்ந்து மாணவர்களுக்கான குழு நடனம், தனிநடனம், திறனறிதல், தனிப்பாடல், மெகந்தி, நிழற்படக் காட்சிப்படுத்தல், முக அலங்காரம், ரீல்ஸ் எனப்படும் வேடிக்கைக் காணொளி, கனெக் சன் உள்ளிட்ட பல கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன.
மாணவர்களுக்கு குதிரையோட்டம் நடந்தது. 30 க்கும் மேற்பட்ட பல்துறை அங்காடிகளும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தன. கலைத்திறன் போட்டிகளில் சிறப் பானப் பங்கேற்பை வழங்கிய பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு வெற்றிக்கோப்பையுடன் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பான பங்கேற்பையும், திறனையும் வெளிப்படுத்திய பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவி பூஜா பட்டு ” மிஸ் யுகன்டா” பட்டத்தையும், கோவை அரசு கலைக் கல்லூரி மாணவன் ஆஸிக் ரகுமான் ”மிஸ்டர் யுகன்டா” பட்டத்தையும் வென்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் பி.கீதா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
யுகன்டா நிகழ்வின் ஒரு பகுதியாக “ ஸ்டார் நைட்” நிகழ்வினை பாபி அவர்கள் தொகுத்து வழங்க, சிறப்பு விருந்தினராக நடிகை திவ்ய பாரதி கலந்துகொண்டு மாணவர் களிடையே உரையாடி விழாவைச் சிறப்பித்தார்.
மேலும், விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள், ஸ்ரீதர் செனா மற்றும் மானசி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் இனிய குரலில் பாடல்களைப் பாடி அசத்தினர். அவர்களைத் தொடர்ந்து தமிழ் ராப் பாடகர் ராவணா ராம் தனது பாடலின் மூலம் மாணவர்களை மகிழ்வித்தார்.
அவருக்கு கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அருண் பொன்னாடை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்வின் தொடர்ச்சியாக திகிரி பேண்ட் குழுவினருடன் இணைந்து சுவாஜின் டிஜே நிகழ்வு மாண வர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
யுகன்டா” 25 நிகழ்வினை, மாணவர் குழு ஆசிரிய ஒருங்கி ணைப்பாளர்கள் மற்றும் மாணவர் குழு உறுப்பினர்கள் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தினர். இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், புல முதன்மையர்கள், துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



