கோவை வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையம் ஜிசிடி நகரில் கிரீன் நெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடெமி தொடக்கிவைக்கப்பட்டது.
திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, தொழிலதிபரும், ரெஜினா திரைப்படத் தயாரிப்பாளரும் இசை இயக்குநருமான கோவை மாவட்ட டென்னிஸ் அசோசியேசன் செயலாளர் பி.எம்.சதீஷ்நாயர், சோமையம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பி.ரங்கராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கிரீன் நெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் மாநில அளவிலான மென் ரேங்கிங் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடந்தன.
பல்வேறு மாவட்ட வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதியாட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், கௌதம் அணியும் திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சஞ்சீவ், மதன் அணியும் மோதியது.
கோவை அணி வீரர்கள்
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், கோவை அணி வீரர்கள், தோல்வியின் விளிம்புக்கே சென்று சுதாரித்துக் கொண்டு, இருமுறை மேட்ச் பாயிண்ட்-டை பிரேக் செய்து கண்ணன், கௌதம் அணி வென்றது.
கிரீன் நெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இயக்குனர் ஜி.ராதா முன்னிலையில் அகாடெமி நிறுவனர் பி.கோபாலகிருஷ்ணன், வெற்றி பெற்ற கண்ணன், கௌதம் ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை வழங்கினார்.
சஞ்சீவ், மதன் ஆகியோர் ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனர்.



