fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி 2023 - 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மேயர் கல்பனா ஆனந்தகுமார் வரவு...

கோவை மாநகராட்சி 2023 – 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மேயர் கல்பனா ஆனந்தகுமார் வரவு ரூ.3018 கோடி: செலவு ரூ.3029 கோடி

கோவை, மார்ச் 31 – கோவை மாநகராட்சிக்கான 2023 &- 24ம் ஆண்டுக்கான வரவு-செலவுக்கான பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் கமிஷனர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் சர்மிளா, மண்டல தலைவர்கள், நிதி குழு தலைவர் முபசீரா கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

கூட்டம் தொடங்கியவுடன் மேயர் கல்பனா 2023- &24ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரை நிகழ்த்தினார். நிதி குழு தலை வர் முப சீரா 2023 -& 24-ம் ஆண் டுக்கான வரவுசெலவு கணக்கை தாக்கல் செய்தார்.

மாமன்றம்

மேயர் கல்பனா தனது பட்ஜெட் உரையில் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா, மெட்ரோ ரயில் திட்டம், எழில்மிகு கோவை,ஆகிய திட்டங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகியோருக்கு மாமன்றம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இம்மாநகராட்சியின் மொத்த செலவினத்தில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு செலவினங்களுக்காக 24.30 சதவீதமும், குடிநீர் பாதாள சாக்கடை பணிகளுக்கு 20.55 சதவீதம், கல்வி துறைக்கு 11.25 சதவீதமும், உள்கட்டமைப்புக்கு 11.75 சதவீதமும், பணி அமைப்பு மற்றும் நிர்வாக செலவினங்களுக்கு 32.15 சதவீதமும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிதி ஆண்டில் கீழ்காணும் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநகர சாலைகள் 215 கோடி ரூபாய் செலவில் வரும் நிதி ஆண்டில் சீரமைக்கப்படும். பள்ளிகளில் கூடுதல் கட்டிடம், சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல், சுத்திக ரிக்கப்பட்ட குடிநீர், புதிய கணினிகள், ஆய்வகங்கள் மக்களை தேடி நூலகம் / கியூ ஆர் கோடு மூலம் வரி வசூல், வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முடிந்தவுடன் 67,545 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும்.

மேலும் பயோ மைனிங் திட்டம், உலர் கழிவு மீட்டு மையம், தெருநாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம், மின் அணு சார்ஜிங் நிலையம், வண்ணத்துபூச்சி பூங்கா, கணித பூங்கா போன்ற திட்டங்கள் இந்த நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும்.
மேலும் இந்த நிதியாண்டில் மேயர் விருப்ப நிதி ரூ1 கோடி ஒதுக்கீடு, கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு திட்டத்திற்கு தலா ரூ 50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்டவாறு மேயர் கல்பனா பட்ஜெட் உரையாற் றினார். கூட்டத்தில் கலந்து கொண்ட 3 அ.தி.மு.க. உறுப்பி னர்கள் பட்ஜெட் உரையில் திட்டப்பணிகள் பற்றி எதுவும் இல்லை, ஜிரோ பட்ஜெட் என கூறி வெளிநடப்பு செய்தனர்.

2023-24 ம் நிதியாண்டில் வருவாய் வரவினம் மற்றும் மூலதன வரவினம் மொத்தம் ரூ 3018.90 கோடியாகவும், வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் மொத்தம் ரூ 3029.07 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் 2023 – 24-ம் திதியாண்டில் நிகர பற்றாக்குறை ரூ10.17 கோடியாகும்

படிக்க வேண்டும்

spot_img