பேங்க் ஆப் இந்தியா, நாடு முழுவதும் 111 புதிய கிளைகளைத் திறந்து வைப்பதன் மூலம் தேசிய அளவிலான வங்கியின் செயல்பாட்டை விரிவாக்கி உள்ளது. இது வாடிக்கையாளர்களின் அணுகல் மற்றும் நிதி செயல்பாடுகளை வலுப்படுத்தும் நடவடிக்கை ஆகும்.
வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி திரு.ரஜ்னீஷ் கர்நாடக் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னெடுப்பு முக்கிய நிதி சந்தையில் அதன் ஆழமான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
புதிதாகத் திறக்கப்பட்ட கிளைகள் பல நகரங்களை உள்ளடக்கி, பாங்க் ஆப் இந்தியாவின் நாடு தழுவிய சேவையை மேலும் வலுப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் 10 புதிய கிளைகளுடன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. அவற்றில் கோவை மண்டலத்தில் கோவை கார்ப்பரேட் கிரெடிட் கிளை (ECCB), கொண்டரசம்பாளையம், நீலாம்பூர், தொண்டாமுத்தூர் மற்றும் வெள்ளக் கோயில் ஆகிய ஐந்து புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
விரிவாக்கம் குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு.ரஜ்னீஷ் கர்நாடக், கூறியதாவது: இந்த விரிவாக்கம் முக்கிய நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான அடித்தள சேவைகளை அருகாமையில் கொண்டு சேர்க்கிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேவை அபிவிருத்தி, அவர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் கச்சிதமான அனுபவங்களைப் பெறுவர். நிதி அணுகல், சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுதல், தனிநபர் நிதி வளர்ச்சிக்கு அதிகாரமளித்தல் ஆகிய வற்றுக்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொள்வது என்பது நிதியுதவி வழங்கும் எங்கள் விரிவான முயற்சி மற்றும் தேசிய பொருளாதாரத்துக்கான பங்களிப்புமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாங்க் ஆப் இந்தியாவின் இந்த விரிவாக்கம் நாடெங்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் நிதி இடைவெளிக்கான ஒரு பாலமாகச் செயல்பட்டு இந்திய வங்கித்துறையில் முக்கியமான இடம் பிடிக்கும்.



