fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வேளாண் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்கக பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா

தமிழ்நாடு வேளாண் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்கக பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (ஜூலை 11) பல்கலை. வளாகத்தில் நடந்தது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2005-ம் ஆண்டில் துவக்கப்பட்டது.
விழாவில், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்க கத்தின் இயக்குநர் முனைவர் ப.பால சுப்ரமணியம் வரவேற்றார்.

தமிழ்நாடு வேளாண்மை இடு பொருள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எம்.மோகன், மாநிலச் செயலாளர் எம்.சத்தியமூர்த்தி, பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டாளர் முனைவர் வி.பாலசுப் ரமணி, ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எம்.ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

காமன்வெல்த் ஆப் லேர்னிங் இயக்குநர் முனைவர் பி.ஷட்ரக் சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி தலைமை தாங்கி பேசும்போது, திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பாடத்திட்டங்களின் முக்கியத்துவங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர்கள் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக 2023-ம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில் 508 மாணவர்கள் பட்டயப் படிப்பு பட்டங்களைப் பெற்றனர். முனைவர் சே.லட்சுமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img