fbpx
Homeபிற செய்திகள்தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் கமாண்டர் நேரில் ஆய்வு

தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் கமாண்டர் நேரில் ஆய்வு

தேசிய மாணவர் படையின் ஆறாவது பட்டாலியன் படை பிரிவு சார்பில் தேசிய மாணவர் படை, ஆண்டு பயிற்சி முகாம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் ஜூன் 13ந் தேதி தொடங்கியது இந்நிலையில், அதனை கண்காணிக்க புதுச்சேரி குரூப் கமாண்டர் கர்ணல். ஆர்.ஆர் மேனன் நேற்று வருகை தந்து பார்வையிட்டார்.

6-வது தமிழ்நாடு பட்டாலியன் கர்ணல் சி.எஸ்.ராவ், கட்டுப்பாட்டு அதிகாரி வழிநடத்தி சென்றார். என்சிசி மாணவ மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார். மேலும் கேள்வி கேட்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். அவர் பட்டயின் வெளிபாடாக அதன் முக்கியதுவத்தையும், வாழ்க்தை நெறிமுறையினையும்,வேலை வாய்பு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் 4 மாவட்ட, கல்லூரி மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரிகளும் பங்கு பங்கேற்றனர். மேலும் முகாமின் அனைத்து அம்சங்களையும், கமெண்டிங் ஆபிசர் மற்றும் சுபேதார் மேஜர் முன்னிலையில் பார்வைபிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img