கோவை சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தில் சிறுவர்களுக்கான மியூசிக்கல் கான்சர்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலயங்களைச் சேர்ந்த சிறுவர்கள் எட்டு வயது முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். இதில் 23 கிறிஸ்தவ பாடல்களை சிறுவர்கள் 60 பேர் வயலின் வாசித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் மற்றும் மியூசிக் டைரக்டர் கேரளா ஜெரி அமல் தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
60 சிறுவர்கள் வயலினோடு இசை நிகழ்ச்சியை நடத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வெகுவாக ரசித்தனர்.
வரும் தலைமுறையினர் மோட்டிவேஷனல் ப்ரோக்ராமாக இது அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக மியூசிக் மாஸ்டர் சுஜிவ்தாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு இலவசமாக வயலின் கற்றுக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.