fbpx
Homeபிற செய்திகள்‘வட இந்தியர்களுக்கு அடிமையாகி விட கூடாது’: கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு மகளின் கவிதையுடன் வந்த தந்தை

‘வட இந்தியர்களுக்கு அடிமையாகி விட கூடாது’: கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு மகளின் கவிதையுடன் வந்த தந்தை

கோவை கலெக்டர் அலுவல கத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

கலெக்டரிடம் மனு

அப்போது கோவை வடவள்ளி பகுதியைச் சார்ந்த பாலமுருகன் என்ற கட்டிட தொழிலாளி கலெக்டரிடம் மனு அளித்தார். அவர் கலெக்டரிடம் தனது மகள் எழுதிய கவிதையுடன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பேனா, பென்சிலுக்கு சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜய்யா அஜித்தா என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள். அழிந்து வரும் தமிழகத்தையும், நமது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம்.

வட இந்தியர்களிடமிருந்து என்னை போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமி ழகத்தை மீட்கும் வரை. இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img