பெஞ்ஜல் புயலால் சேதம் மடைந்த பயிர்க ளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று கடலூரில் நடந்த குறை கேட்பு கூட்டத்தில் கலெக்டர் கூறினார். விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி, வேளாண்மை இணை இயக் குனர் கென்னடி ஜெயக் குமார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயி கள் பேசியதாவது: -பெஞ்ஜல் புயல், மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, மணிலா உள்ளிட்ட சேதமடைந்த பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. தமிழக அரசு காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க அரசாணை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பாது காப்பானது அல்ல. குறுவை பருவ பயிர் சாகு படிக்கு வழங்கிய பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு முழுமை யாக வழங்க வேண்டும்.
எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அலுவலர் முன்னிலை யில் ரூ.75 ஆயிரம் வெட்டுக்கூலி வேலையாட்களுக்கு வழங்கப் பட்டது. அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பணம் வாங்கிய நபர் சென்று விட்டார். அந்த பணத்தை பெற்றுத்தர வேண்டும். வெள்ளாற்று படுகைகளில் உற்பத்தி செய்யப் படும் மரவள்ளி கிழங்குகளை மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர். இதை கேட்ட கலெக்டர்,பெஞ்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும், விசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் வேளாண்துறை மூலம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.