கோவை நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும் மீரட், ஷோபித் நிகர் நிலை பல்கலைக்கழகம் இணைந்து கோவை, பாலமலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்திய அரசின் தேசிய தகவல் மையத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் ஷோபித் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் மோனி மாடசாமி, நிர்மலா மகளிர் கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியால் தத்தெடுக்கப்பட்ட பாலமலையில்உள்ள 9 மலைவாழ் கிராம மக்களின் புதிய தொழில்நுட்ப வேளாண்மை முறைகளை செயல்படுத்துவதற்கும், திறன் அடிப்படையிலான பயிற்சி, மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகள் மூலம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்படும்.
ஷோபித் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் மோனி மாடசாமி, மலைவாழ் மக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, 2019 முதல் கோவை நிர்மலா மகளிர் கல்லூரியானது பாலமலையில் உள்ள மலை வாழ் மக்களுக்காக கொரோனா காலகட்டத்தில் பொருளுதவி செய்ததோடு மட்டுமன்றி தொடர்ந்து துறைதோறும், பேராசிரியர்கள் , மாணவிகள் தங்களது துறைசார் கல்வி மற்றும் திறன் வளர் பயிற்சிக்கான பணியினை செய்து வருவதை பாராட்டினார்.