Homeபிற செய்திகள்கோவை மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் 550 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

கோவை மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் 550 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (19ம் தேதி) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி யிடம் அளித்தனர்.

பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 98 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வேண்டி 257 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 7 மனுக்களும், 188 இதர மனுக்கள் என மொத்தம் 550 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, உதவி ஆட்சியர்(பயிற்சி) அங்கத் குமார் ஜெயின், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img