fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் கார்னியர் நிறுவனத்தின் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையம்

சென்னையில் கார்னியர் நிறுவனத்தின் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையம்

உலகின் மிகப் பெரிய அழகு சாதனங்களின் பிராண்டான கார்னியர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தனது உறுதிமொழியை வலுப்படுத்தும் வகையில், சென்னையில், பிரத்யேகப் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையத்தைத் தொடங்கி உள்ளது.

பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் என்னும் சமூக அமைப்புடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துச் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந் துள்ளது. முதல் வருடத்தில், கடலில் கலக்கவுள்ள 2000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை தடுத்து மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும்.

உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த 2000 மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ இருக்கிறது. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கார்னியர் நிறுவனத்தின் ஐகானிக் ஹேர்கேர் அல்ட்ரா டூ ரகப் பொருள்களுக்கான பேக்கேஜிங் பயன்பாட்டுக்காக ஒருங்கிணைக்கப்படும்.

முதல் முறையாக அல்ட்ரா டூ பாட்டில்கள் 100% மறுசுழற்சி செய்த பிளாஸ் டிக்களால் தயாரிக்கப்படும். இவற்றுள் 30% கடலில் கலக்க இருந்த பிளாஸ்டிக் கழிவுகளாகும்.

ஓன்க்ரீன்ஸ்டெப்

சேகரிப்புச் சேவைகள் அணுக்கம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், கார்னியர் பிளாஸ்டிக் சேகரிப்பு கியாஸ்குகளைச் சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் நிறுவ உள்ளது. இதன் மூலம் நுகர்வோர் #ஓன்க்ரீன்ஸ்டெப் (OneGreenStep) கொள்கையில் தாங்களாகவே ஈடுபடுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுவர்.

மின் வணிகக் கூட்டாளிகளான அமேசான் மற்றும் மிந்த்ரா ஆகியோருடனும் இணைந்து, இத்தளங்களில் வாங்கப்படும் ஒவ்வொரு கார்னியர் பொருளுக்கும், பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் மூலம், இரு பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படும்.

இது குறித்து கார்னியர், லே’ஓரியல் – குளோபல் பிராண்ட் தலைவர், ஏட்ரியன் கோஸ்காஸ் கூறுகையில், ‘ பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் அமைப்புடனான கூட் டாண்மை மூலம் மைல்கல் சாதனையாகச் சென் னையில் பிரத்யேகப் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மையத்தைத் திறந்துள்ளோம் என்றார்.

பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் சிஇஓ / நிறுவனர் ஆண்ட்ரூ ஆல்மேக் பேசுகையில், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்னும் நோக்கத்துடன் ‘பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ தொடங்கப்பட்டது.

2030-ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் கழிவு சேகரிப்பாளர்களை நியாயமான வர்த்தக விநியோகச் சங்கிலிகள் மூலம் இணைப்பதே குறிக்கோள். சேகரிப்பு மையம், இயற்கையை பாதிக்காத அழகு பயணத்தில், பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் மற்றும் கார்னியருக்கான முக்கிய மைல்கல் ஆகும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img