fbpx
Homeபிற செய்திகள்வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் விழா

வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் விழா

கோவைப்புதூர், வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் இந்தியர்கள் (YI) அமைப்பு, அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 250 எஸ் உடன் இணைந்து தேசிய மருத்துவர் தினத்தை கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்குக், கோவை மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், மருத்துவரின் தன்னலமற்ற தியாகத்தையும், தனி நபர் மற்றும் ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் முழுமையும் சிறந்து விளங்க மருத்துவத் துறையே காரணமாக விளங்குகின்றது என்றும், அவர்களது இரக்க உணர்வும், அர்ப்பணிப்புமே இதற்குக் காரணமாக இருக் கின்றது என்றும் கூறினார்.

கல்லூரி நிர்வாக அறங்காவலர் சூரியகுமார் ஒவ்வொருவருடைய வாழ்விலும், மருத்துவத் தேவைகள் எவ்வாறு முக்கியத்துவம் பெறு கின் றன என்றும் விளக்கினார்.
விழாவில் கோவை மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் ஏ.நிர்மலாவுக்கு அவரது தன்னலமற்ற தொண்டினையும் மருத்துவத்துறையில் அவரது சாதனைகளையும் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து ஏறத்தாழ 13 மருத்துவர்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி விருது வழங்கப் பட்டது.

அலையன்ஸ், அமைச்சரவைச் செயலாளர் குமார் மற்றும் அமைச்சரவைப் பொருளாளர் எஸ் பிரசாத், எம் குணசேகரன், எஸ். சண்முகம் ஆகியோர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். மேலும் மருத்துவர்களுக்கு விருது கள் வழங்கப்பட்டன. விருது பெற்ற மருத்துவர்கள் ஏற்புரை வழங்கினர். இந்த நிகழ்விற்கு அலையன்ஸ் மாவட்டத் தலைவர் எஸ்.பிரபாகரன் வரவேற்புரை வழங்கினார். அலையன்ஸ் ராஜன் தலைமையுரை வழங்கினார். நிகழ்வின் நிறைவாக கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கே.வாசுதேவன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img