fbpx
Homeபிற செய்திகள்சேர்மன் நல்ல ஜி பழனிச்சாமி தலைமையில் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு...

சேர்மன் நல்ல ஜி பழனிச்சாமி தலைமையில் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பார்க்கில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கேஎம்சிஎச் மருத்துவமனை சேர்மன் நல்ல ஜி பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி முன்னிலை வைத்தார்.

விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கையெழுத் திட்டு தொடங்கி வைத்தார்கள்.


இது குறித்துடாக்டர் நல்ல ஜி பழனிச்சாமி கூறி யதாவது:- அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் கொண் டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்துவ மனை நகரிலேயே முதன் முறையாக இப்படி ஒரு புதுமையான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது.
கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனை யான கேஎம்சிஹெச் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு என ஒரு ஒருங்கிணைந்த புற்று நோய் மையம் மற்றும் ஒரு பிரத்யேக மார்பக புற்றுநோய் மையம் செயல்படுகின்றன. இவற்றில் இருக்கும் சிகிச்சை வசதிகள் உலகின் மிகச் சிறந்த மருத்துவமனைக ளுக்கு இணையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சைகள் அளித்து குணப்படுத்திவிட முடியும்.
வருடா வருடம் உலக ளவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோயால் இறக்கிறார்கள் என்பது துயரம் தரும் செய்தி.
நம்பிக்கை அளிக்கும் செய்தி என்னவென்றால் ஆரம்ப நிலை புற் றுநோய்களில் 90 சதம் குணப்படுத்திவிடக் கூடியவையாகும். அதற்கான சிகிச்சை அளிக்க கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் திறமை மிக்க டாக்டர்கள் குழுக் கள் உள்ளன.

பெண்கள் மத் தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத் தப்படுகின்றன. மேற்கண்டவாறு அவர் கூறினார்.
அப்போது செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி, டாக்டர் ரூபா ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img