fbpx
Homeபிற செய்திகள்2023-2024ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கூட்டுறவாளர்களுக்கு விருது

2023-2024ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கூட்டுறவாளர்களுக்கு விருது

2023-2024ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கூட்டுறவாளர்கள் இரண்டு பேரை கிரிப்கோ கூட்டுறவு உர நிறுவனம் தேர்வு செய்து புதுடெல்லியில் தேசிய கூட்டுறவு ஒன்றியம் ஊட்ட அரங்கில் விருது வழங்கப்பட்டது.

இதில் கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் முன்னாள் துணைத் தலைவர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றார்.

சககாரிதா விபூஷன் என்னும் விருதை க்ளிப்கோ நிறுவனத்தின் தலைவர் முனைவர் சந்திர பால் சிங் யாதவ் மற்றும் கூட்டுறவு நிறுவனத்தின் இயக்குனர்கள் உடன் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மத்திய அரசின் முன்னாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை அமைச்சர் மோகன் குண்டாரியா அவருடன் க்ரிகோ நிறுவனத்தின் இயக்குனரும் தெலங்கானா அரசின் போக்குவரத்து துறை அமைச்சருமான பொன்னம் பிரபாகர் உடனிருந்து வழங்கினர்.

இந்த விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்தி ஓராயிரம் பரிசுத் தொகையாக காசோலை செந்தில்குமாருக்கு வழங்கப்பட்டது.

அப்போது டியூகாஸ் நிறுவனத்தின் உறுப்பினர் வி எஸ் காளிசாமி மற்றும் எம்எஸ் ஜஸ்வந்த், கிரிப்கோ நிறுவனத்தின் முதன்மை விற்பனை மேலாளர் ராம் குமார் உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img