அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் அவி னாசிலிங்கத்தின் 122வது ஆண்டு பிறந்தநாள் விழா உயர் தொழில்நுட்பக் கூடத்தில் நடைபெற்றது.
இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பாரதிஹரிசங்கர் வரவேற்புரையாற்றினார்.
ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மற்றும் வேந்தர் முனைவர் தி.ச.க. மீனாட்சி சுந்தரம் தலைமையு ரையாற்றினார்.
அப்போது அவர் கூறு கையில், “அய்யா சென்னை மாகாணத்தின் முதல் கல் வியமைச்சராக இருந்து கல் விப்பணிக்காக தம்மையே அர்ப்பணித்தவர். நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகச் செம்மல்” என்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இந்நிறுவனத்தை அவினாசிலிங்கம் அய்யா மெழுகுவர்த்தியாய் உருகி உருவாக்கியிருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து, கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் அவினாசிலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிறைவாக பதிவாளர் இந்து நன்றியுரை வழங்கினார்.