fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரிக்கு சுயாட்சி அந்தஸ்து

நீலகிரி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரிக்கு சுயாட்சி அந்தஸ்து

1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீலகிரி சிஎஸ்ஆ பொறியியல் கல்லூரிக்கு, யூஜிசி மற்றும் கல்வி அமைச்சகம் ஜூலை 28, 2025 முதல் 2029-30 வரையிலான காலத்திற்கு சுயாட்சி (Autonomous Status) அந்தஸ்து வழங்கியுள்ளது.
கல்லூரி கடந்த 26 ஆண்டுகளில் 25,000 மாணவர்களுக்கு கல்வி வழங்கியுள்ளது. 2023-ஆம் ஆண்டு NAACஅங்கீகாரம் பெற்ற இந்த நிறுவனம், தற்போது 85%-&95% வரை வேலைவாய்ப்பு சாதனை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு, இக்கல்லூரியை EDII TN Hub ஆக அங்கீகரித்துள்ளது.
மாணவர்களுக்கு தொழில்முனைவு வளர்ச்சி, ஆராய்ச்சி, ஹாக்கத்தான், இன்கியுபேஷன் மையங் கள் மூலம் உதவி செய்யப் படுகிறது. விளை யாட்டு, கலாச்சாரம், என்எஸ்எஸ் உள் ளிட்ட துறைகளில் பல விருது களை பெற்றுள்ளது.
இப்போது கல்லூரிக்கு Outcome-based Education, Multidisciplinary Learning, தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பாடத் திட்டங்களில் புதுமைகளை செய்ய கல்விச் சுதந்திரம் கிடைத் துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் Deemed to be University ஆக உயர்வதே கல்லூ ரியின் எதிர்கால இலக்காகும். இந்நிறுவனம் சிஎஸ்ஐ கோயம்புத்தூர் மறைமாவட் டத்தின் கீழ் இயங்குகிறது. இதன் தலைவராக பேராயர் திமோத்தி ரவீந்தர், தொடர்பாளராக காட்வின் ஆர்.டேனியல், இயக்குனராக டாக்டர் பி.டி.அருமைராஜ், முதல்வ ராக டாக்டர் ஆர்.மெர்ஸி சாந்தி பேராயர் அம்மா ஆனி ஹேமலதா ரவீந்தர், திருமண்டல பொருளாளர் டி.எஸ்.அமிர்தம், செயலாளர் பாதிரியார் பிரின்ஸ் கால்வின், உபதலைவர் பாதிரியார் டேவிட் பர்னபாஸ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img