fbpx
Homeபிற செய்திகள்கடலூர் அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் 722 பேருக்கு ரூ.6 கோடியில் நலத்திட்ட உதவிகள்

கடலூர் அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் 722 பேருக்கு ரூ.6 கோடியில் நலத்திட்ட உதவிகள்

கடலூரில் அரசுபொருட் காட் சியை தொடங்கி வைத்த அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம்‘ 722 பேருக்கு ரூ.6 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் செய்தித்துறை சார்பில் அரசு பொருட் காட்சி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநக ராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகி யோர் முன்னிலையில் அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் 722 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 93 லட்சத்து 96 ஆயிரத்து 386 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் வேறு எந்த மாநிலத் திலும் இல்லாத அளவிற்கு தனிநபர்கள் பயன்பெறும் வகையிலும், பொருளாதாரம் மேம் படும் வகையிலும் எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார். மேலும் அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொது மக்கள் அறிந்து செயல்படுத்திக்கொள்ளும் பொருட்டு, மாநிலத்தில் வருடந்தோரும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம்மைதானத்தில் இன்று முதல் (அதாவது நேற்று) 45 நாட்கள் வரை பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய அனைத்துத் துறைக ளின் திட் டங்களையும் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாபெரும் அரசுப் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பொருட்காட்சியில் சிறுவர்க ளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள்,பல்வேறு வகை சார்ந்த உணவு அரங்குகள் இடம் பெற்றுள்ளது.எனவே, அனைவரும் இக்கண்காட்சியினை கண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குனர் தமிழ்செல்வராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவ லர் நாகராஜபூபதி, மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img