fbpx
Homeபிற செய்திகள்ஏஆர்டி கருத்தரிப்பு மையத்தில் இணைந்த டாக்டர் நய்யார்

ஏஆர்டி கருத்தரிப்பு மையத்தில் இணைந்த டாக்டர் நய்யார்

ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருத்தரித்தல் நிபுணரான டாக்டர் கேடி நய்யார், கருத்தரிப்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய வலையமைப்பு கொண்ட ஏஆர்டி கருத்தரிப்பு மையத்தில்,இணைந்தார்.

ஐவிஐ மிடில் ஈஸ்ட்

2015-ம் ஆண்டில் ஐவிஐ ஆர்எம்ஏ குளோபலின் விரிவாக்கமாக ஐவிஐ மிடில் ஈஸ்ட் என்ற பிராண்ட் பெயரில் அமைக்கப்பட்ட ஏஆர்டி கருத்தரிப்பு மையம் கடந்த 2020-ம் ஆண்டில் அதன் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.இந்நிறுவனத்திற்கு அகமதாபாத், டெல்லி, சென்னை, குருகிராம், ஹைதராபாத் மற்றும் மும் பையில் ஆறு கிளைகள் உள்ளன.

ஏஆர்டி கருத்தரிப்பு மையத்தில் இணைவது குறித்து டாக்டர் நய்யார் கூறுகையில், என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய படியாக உணர்கிறேன். உலகின் மிகவும் புகழ் பெற்ற கருத்தரித்தல் மையத்தில் இணைவது மிகுந்த திருப்தியைத் தரு கிறது. இம்மையத்தின் வளர்ச்சிக்கு என்னால் நிறைய பங்களிக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றார்.

ஏஆர்டி கருத்தரிப்பு மையத்தின் குழு மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஃபதேமி டாக்டர் நய்யாரை பேசுகையில், டாக்டர் நய்யாரின் முழுமையான அனுபவம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் அவரது பல ஆண்டு கால அனுபவத்தில், கருத்தரித்தல் நடைமுறைகளை நடத்தும் போது ஏற்படக்கூடிய அனைத்து சிக்கல்களையும் அவர் சந்தித்து தீர்வு கண்டுள்ளார் என்றார்.

ஏஆர்டி கருத்தரிப்பு மைய இணை மருத்துவ இயக்குநர் டாக்டர் பாருல் கட்டியார் கூறுகையில், இந்தியாவில் எங்களது வெற்றிக் கதையை எழுத அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

ஏஆர்டி கருத்தரிப்பு மைய, இணை மருத்துவ இயக்குநர் டாக்டர் ரிச்சா ஜக்தாப் கூறுகையில், அவரது அறிவு, அனுபவம் மற்றும் வெற்றிகரமான மருத்துவப் பலன்களின் உயர் விகிதத்தைக் கருத்தில் கொண்டு, ஏஆர்டி கருத்தரிப்பு மையம் தனது கால்தடத்தை மிக விரைவான விகிதத்தில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் என்றார்.

ஏஆர்டி கருத்தரிப்பு மையத்தின் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சோமேஷ் மிட்டல் கூறுகையில், டாக்டர் நய்யார் கருத்தரித்தல் துறையின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்களை நன்கு அறிந்தவர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img