fbpx
Homeபிற செய்திகள்கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கல்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

100 கர்ப்பிணிகள்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் வரவேற்றார். மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், 100 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.

சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரம்ம சக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ், திமுக முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராம ஜெயம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் விபிஆர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்ரமணியன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ் பாலன், மாண வரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img