fbpx
Homeபிற செய்திகள்ரத்தக் கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

ரத்தக் கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு பகுதியில் 40 முறைக்கு மேல் தொடர்ந்து இரத்ததானம் வழங்கி வரும் இரத்தக் கொடையாளர்களுக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

தொடர்ந்து இரத்ததான வழங்கி வரும் இரத்தக் கொடையாளர்களுக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் தலைவர் பரந்தாமன் பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மோகனபானு கலந்து கொண்டார். 

நிகழ்வில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் நிறுவனர் சேன்யோ குமார்,துணைத் தலைவர் மகேஷ் குமார்,செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் கணேஷ் குமார், இணை செயலாளர்கள் கலையரசி ஜெயக்குமார், கோகுல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடாசலம், தினேஷ் குமார், மோகன்,ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img