fbpx
Homeபிற செய்திகள்மே மாதம் ஈரோட்டில் வேளாண் கண்காட்சி

மே மாதம் ஈரோட்டில் வேளாண் கண்காட்சி

ஈரோட்டில் மே மாதம் நடைபெற உள்ள 2 நாள் மண்டல வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு -2025- தொடர்பான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, சிக்கையா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி.குமாரவேல் பாண்டியன் மற்றும் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் உடன் இருந்தனர்.

மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் துவதற்காக ஈரோடு மாவட்டத்தில் கண்காட்சி நடத்தப்படும். கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சி ஆகிய 10 மாவட்டங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில், அரசுத் துறைகள் சார்பாக 70 அரங்குகளும், தனியார் நிறுவனங்கள் (விவசாயி உற்பத்தியாளர் நிறுவன ங்கள் உட்பட) சார்பாக 130 அரங்குகளும் அமைக்க ப்படும். அடுத்த மாதம் இரண்டு நாட்கள் தினமும் 5000 விவசாயிகள் பயனடையும் வகையில் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img