கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட டரங்கில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆணையத் தலைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையர் சரவணசுந்தர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அரசு திட்டங்கள் மாவட்டத்தில் முழுமையாக செயல் படுத்தப் பட்டுள்ளதா? எந்த அளவுக்கு செயல்பாட்டில் உள்ளது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆணையத் தலைவர் தமிழ்வாணன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பொது மக்கள், அமைப்பினர் தங்களது பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். முன்னதாக நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இன் னும் சில விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளன. அதனை செய்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
நேற்று இரவு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் ஆய்வு செய்தோம். அப்போது அங்கு போதிய வசதிகள் இல்லை என தெரிய வந்தது. அதனை உடனடியாக சீர் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் தரையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதில் பல இடங்களில் சிரமம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியரிடம் தெரிவித்த ப்பட்டுள்ளது. 2,000 மக்கள் வீடுகள், பட்டா நிலம் கேட்டுள்ளனர். அதனை ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்.
தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளது. அவை தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அரசால் வழங்கப்படும் நிலங்களுக்கு உடனடியாக பட்டா ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கோவையில் பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



