fbpx
Homeபிற செய்திகள்சாதிக்க துடிக்கும் சாதனை சகோதரிகள்

சாதிக்க துடிக்கும் சாதனை சகோதரிகள்

தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகைகடை ஊழியர் முகம்மது நஸுருதீன் – ஜலிலா தம்பதிகளின் மகள்கள் யோகா ஸ்டார் விருது பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபா (வயது 18), குற்றாலம் செய்யது பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவி. இவரது தங்கை ஷாஜிதா ஜைனப் (வயது 11), 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இம்மாணவிகள் யோகாவில் உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்கள். இதில் மிஸ்பா மாவட்ட, மாநில, தேசிய யோகா போட்டிகளில் வென்று கடந்த 2016-&2018 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் ஆசிய அளவிலான யோகா போட்டிகளில் இரண்டு முறை முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றவர்.

பல போட்டிகள் மட்டுமில்லாமல் தொடர்ந்து இவ்விருவரும் யோகா, ஸ்கேட்டிங்கில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி வருகின்றனர். பல்வேறு சாதனை சான்றிதழ்களும் விருதுகளும் வாங்கி குவித்து வருகின்றனர்.
இதில் மிஸ்பாவிற்கு பயின்ற பள்ளி நிர்வாகம் இவரது திறமையை அங்கீகரித்து, குடும்ப ஏழ்மை சூழலறிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கி இருந்ததால் இதே பள்ளியில் தொடர்ந்து பயின்று தற்போது 12 ஆம் வகுப்பு முடித்து யோகா மருத்துவ பட்டப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

மளிகைகடை ஊழியர் மகள்களான மிஸ்பா,ஷாஜிதாவை இனி போட்டிகள் சம்பந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப ஆயிர கணக்கில் பணத்தை திரட்டுவது என்பதும் இயலாத காரியம் மூத்த சகோதரி மிஸ்பா கடந்த மே மாதம் மருத்துவர் ஆகும் லட்சியத்தில் நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில் Bnys படிப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளார். இதற்கும் செலவழிக்க இவர்களது குடும்ப சூழல் இல்லை. மேலும் ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் பிரிவில் யோகா இடம்பெற்றால் அதிலும் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றோம் போட்டிகள் என்பது மட்டுமில்லாமல் தினம் யோகா செய்வதனால் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியம் பெற்று படிப்பில் முழு கவனம் செலுத்த முடிகிறது என்ற மிஸ்பா மருத்துவராகி தம்மை போன்று ஏழை / எளியவர்களுக்கு சேவை செய்வதே லட்சியமாக கொண்டுள்ளார்.

சாதிக்க துடிக்கும் இந்த எளிய சகோதரிகளுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் கொடுத்தால் இன்னும் பல சாதனைகளை செய்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்து தருவார்கள் என்று யோகா ஆசிரியர் குரு கண்ணன் வேண்டுகோள் விடுக்கின்றார்.

படிக்க வேண்டும்

spot_img