முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா வை முன்னிட்டு ஜியோ கிரீன் அறக்கட்டளை மற்றும் லைஃப்
சேஞ்ச் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா கோவை ஈச்சனாரி குள்ளையா செட்டியார் திருமண மண்டபத்தில் கடந்த 15ம் தேதி நடைபெற்றது.
நீண்ட நாள் சமூக சேவையை பாராட்டி சமூக சேவகர் ஜியோ நண்பர்கள் சேவ சங்கத்தைச் சேர்ந்த மகாதேவனுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
விழாவில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆர்.அசோக்குமார், மாநிலத் துணைத்தலைவரும் ஜியோ கிரீன் அறக்கட்டளை நிறுவனருமான எஸ்.விஜயகுமார், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் லைஃப்
சேஞ்ச் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் நிறுவனருமான த.பத்மநாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.