கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க. கிரியப்பனவர், ‘கேம்போர்டு விங்கத் தான் 2.0 பறவைகளுக்காக ஓடுவோம்‘ என்ற மினி மாரத்தான் போட்டிக்கான இணையதளப் பதிவைத் தொடங்கி வைத்து, நிகழ்ச்சிக்கான டி-ஷர்ட்டை வெளியிட்டார்.
கேம்போர்டு சர்வதேசப் பள்ளி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மினி மாரத்தான், உடல் ஆரோக்கியம், பறவைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விங்கத்தான் 2.0 போட்டி 2027 ஜனவரி 3ம் தேதி காலை 6 மணிக்கு கோவை கேம்போர்டு சர்வதேசப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்குகிறது. ஜனவரி 5ம் தேதி கடைப்பிடிக்கப்படும் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இப்போட்டியில், 5 கி.மீ. மற்றும் 7 கி.மீ. என இரு பிரிவுகள் இடம்பெறுகின்றன.
இப்போட்டியில் மாணவர்கள், பெற்றோர்கள், உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் பறவைகளின் முக்கியப் பங்கு, அவற்றின் இயற் கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாது காக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு மத்தியில், இளம் தலைமுறையினர் மற்றும் பொது மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொறுப்புணர்வை வளர்க்கவும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கல்வி என்பது வகுப்பறைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் மூலமாகவும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் தெரிவித்தனர்.
மேலும், பறவைகள் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கோவையில் ஆண்டுதோறும் நடைபெறும் மக்கள் இயக்கமாக விங்கத்தான் நிகழ்ச்சியை உருவாக்குவதே தங்களது நோக்கம் என்றும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் தொடக்க நிகழ்ச்சியுடன் விங்கத்தான் 2.0 போட்டிக்கான இணையதளப் பதிவு மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்கியுள்ளது.



