Homeபிற செய்திகள்அரசியலமைப்பு மாண்பை காப்போம் : கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ வாழ்த்து

அரசியலமைப்பு மாண்பை காப்போம் : கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ வாழ்த்து

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. கனிமொழி சந்தோஷ், நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடித்தளமாக அரசியலமைப்பு விளங்குகிறது.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், நீதி ஆகிய உயரிய கொள்கைகளைப் பாதுகாப்பதுடன், அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளையும், வலியுறுத்தும் கடமைகளையும் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களை நினைவுகூர்ந்து, ஜனநாயக மாண்பையும் சமூக நீதியையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img