Homeபிற செய்திகள்கோவையில் ஜி.எஸ்.டி வரி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் ஜி.எஸ்.டி வரி விழிப்புணர்வு நிகழ்ச்சி

மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை கோவை ஆணையரகம் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவ
னம் கோவை கிளை சார்பில், ‘100 நாட்கள் – எளிய வரி உரையாடல்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, துடியலூரில் உள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனக் கட்டடத்தில் நடந்தது. கோவை ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் தினேஷ் பங்கர்தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 2011-12ம் ஆண்டு தலைவர் சி.ஏ. ஜி. ராமசாமி பங்கேற்றார்.


வரி செலுத்துவோருக்கு வழிகாட்டுதல், வரி நடைமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம், கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெறுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியை கோவை உதவி ஆணையர் கிரண் சுயேம்பு, சி.ஏ. சர்வஜித் கிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img