Homeபிற செய்திகள்மருதமலை கோவிலில் 20 அடி உயர தீபத் தூணில் மகா தீபம் ஏற்றம்- பல்லாயிரம் பக்தர்கள்...

மருதமலை கோவிலில் 20 அடி உயர தீபத் தூணில் மகா தீபம் ஏற்றம்- பல்லாயிரம் பக்தர்கள் வழிபாடு

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 20 அடி உயர தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு, கோவில் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிர மணிய சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து ஆதி மூலஸ்தானம், சிவன் சன்னதி மற்றும் அம்மன் சன்னதிகளில் தீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து கொடி கம்பம் அருகில் உள்ள 20 அடி தீப தூணில் தீபம் ஏற்றபட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரம் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப் பெருமானை வழிபட்டனர். சொக்கப்பனை எரிக்கப் பட்ட பின்னர் கிடைத்த சாம்பலை நெற்றியில் திலகமிட்டு பக்தர்கள் பக்தியுடன் வழிபாடு செய்தனர். கார்த்திகை தீபத் திரு விழாவை முன்னிட்டு கோவில் ராஜகோபுரம் மற்றும் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டு ஜொலித்தது.
இந்நிகழ்ச்சியில் கோவில் தக்கார், துணை ஆணையர் விமலா, கோவில் பணியாளர்கள் மற்றும் கோவை மாநகர காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் பாது காப்பிற்காக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img