யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி கிளை சார்பில் இன்று (நவம்பர் 24) முள்ளுக்குறிச்சி கிராமத்தில் நிதி சேவைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அனைவருக்கும் விரைவாக வங்கியின் நிதி சேவைகள் கிடைக்கும் நோக்கத்த்தில் நடந்த இந்த முகாமை, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சேலம் பிராந்திய தலைவர் பி.எம்.செந்தில்குமார், சென்னை மண்டல உதவி பொது மேலாளர் ஸ்ரீகாந்த், நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் மற்றும் முள்ளுக்குறிச்சி கிளைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
முகாமின் முக்கிய சிறப்பம்சங்களாக, PMJDY பூஜ்ஜிய இருப்பு கணக்குகள் தொடங்கப்பட்டது. PMJJBY – PMSBY சமூகப் பாதுகாப்பு காப்பீட்டுப் பதிவுகள், APY- முதியோர் பாதுகாப்புக்கான ஓய்வூதியப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் CKYC மற்றும் Re-KYC இணக்கம் செய்யப்பட்டது. பாதுகாப்பான டிஜிட்டல் வங்கி நடைமுறைகள், செயல்படாத கணக்குகளைச் செயல்படுத்துதல், தகுதியான கணக்குகளில் வாரிசு புதுப்பித்தல், PMJJBY & PMSBY திட்டங்களில் ஆதார் இணைத்தல் போன்ற சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில், PMSBY கணக்கு வைத்திருந்து இறந்து போனவரின் வாரிசுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. நிதி எழுத்தறிவு மற்றும் விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



