கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ் அகாடமியில் நடைபெற்ற 12-வது கென் ஐ கான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். இதில் பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்கள் பங்கேற்று அனைவரும் பரிசுகளை வென்றனர். மாணவர்களின் கராத்தே திறமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
இது குறித்து பள்ளித் தலைவர் டாக்டர் கந்தசாமி கூறுகையில், கல்வியுடன் விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பள்ளியின் நோக்கம். 12 மாணவர்களும் பரிசு வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பயிற்சியாளர், கராத்தே மாஸ்டர் மற்றும் பெற் றோர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



