Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் அறக்கட்டளை பவள விழா : 1,430 மாணவிகளுக்கு பல் பரிசோதனை

அவினாசிலிங்கம் அறக்கட்டளை பவள விழா : 1,430 மாணவிகளுக்கு பல் பரிசோதனை

அவினாசிலிங்கம் அறக்கட்டளை நிறுவனத் தின் 75வது ஆண்டு பவள விழா நேற்று தொடங்கியது. இதன் முதல் நிகழ்வாக வாய் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பல் பரிசோதனை முகாம் நடந்தது. வேந்தரும், நிர்வாக அறங் காவலருமான முனைவர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் 1,430 மாணவிக ளுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துணை நிர்வாக அறங்காவலர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணன், துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிஷங்கர், பள்ளிச் செயலர் முனைவர் காமினி கிருஷ்ண குமாரி சுரேந்திரன், அறக்கட்டளை உறுப்பினர் மருத்துவர் ராஜேஷ், தலைமை ஆசிரியை ஜெ.நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img