Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி 164வது நிறுவனர் தினவிழா மாணவர்களுக்கு விருது வழங்கி...

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி 164வது நிறுவனர் தினவிழா மாணவர்களுக்கு விருது வழங்கி கோலாகலம்

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, தனது 164-வது நிறுவனர் தினவிழா -2026ஐ பள்ளியின் முதன்மை அரங்கில் மிக விமரிசையாக உற்சாகத்துடன் கொண்டாடியது.


இவ்விழாவில் சர் இராபர்ட் ஸ்டேன்ஸ் கல்வி நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ், தாளாளர் மெர்சி ஓமன், செயலாளர் டாக்டர் விஜிலா எட்வின் கென்னடி, பொருளாளர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர் பிலிப் ஆர்.ஜே.ஃபௌலர், பள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் செயலர் ஜான் மற்றும் முன்னாள் இந்நாள் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மேலும், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜான் ஸ்டீபன், ICSE, CISCE பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஐலீன் ஜெத்ரோ மற்றும் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் எனப்பலரும் ஒன்றுகூடி, இக்கல்வி நிறுவனத்தின் சிறப்புமிக்க பாரம்பரியம், நிலையான நற்பண்புகள் மற்றும் தொலைநோக்குச் சிந்தனைகளை நினைவுகூர்ந்து சிறப்பித்தனர்.

முன்னதாக சர் இராபர்ட் ஸ்டேன்ஸ் நிறுவனர் தின விழா, இறைவனுக்கு நன்றி செலுத்தும் சிறப்புப் பிரார்த்தனையுடன் தொடங்கியது. பிரார்த்தனையை அருட்திரு டாக்டர் கிரேஸ் ஐடாராஜன் வழிநடத்தினார். பள்ளி நிறுவனம், அதன் நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஸ்டேன்ஸ் குடும்பத்தினர் அனைவரின் மீதும் இறைவனின் அளவற்ற ஆசீர்வாதங்கள் பொழியவேண்டி அவர் பிரார்த்தனை செய்தார்.


பள்ளியின் முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன், விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அனைவரையும் வரவேற்றார். மேலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மருத்துவ நிபுணரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் மாமென்சாண்டி MD, FRACP, FRCPA, FRCP, D.Sc. அவர்களை அறிமுகப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கும் வகையில், சர். இராபர்ட் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். .
டாக்டர் மாமென் சாண்டி சிறப்புரையாற்றுகையில், தனது மதிப்புமிக்க அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொண் டார். அவரது உரை, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாகவும் ஊக்கமளிப் பதாகவும் அமைந்தது.

குறிப்பாக, மாணவர்கள் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தெளிவான இலக்குடன் செயல்பட்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உத்வேகத்தை அவரது வார்த்தைகள் ஏற்படுத்தின.
விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, நூலகப் பொறுப்பாசிரியர் சொர்ணலதா ஸ்வீட்லினுக்கு சர். இராபர்ட் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, விருது வழங்கப்பட்டது.
அவரது சேவையைப் பாராட்டும் வகையில் தாளாளர் மெர்சி ஓமன் பாராட்டுரை வாசித்தார். பின்னர், அவருக்கு விருதினை வழங்கி, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டினார்.

மேலும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர்கள் மற்றும் தனித்திறமைகளை வெளிப்படுத்திய தகுதியான மாணவர்களுக்கு, நிறுவனர் தின விருதுகள் வழங்கப்பட்டன.


மாணவர்களின் திறமைகளை வளர்த்தல், முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் சிறந்து விளங்கும் மனப்பான்மையை உருவாக்குதல் ஆகியவற்றில் பள்ளி தொடர்ந்து கொண்டுள்ள அர்ப்பணிப்பை இவ்விருதுகள் எடுத்துக்காட்டின.

விழா நிறைவில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் துணை முதல்வரு மான டாக்டர் வி.திவாகரன் நன்றி கூறினார்.


சிறப்பு விருந்தினர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் இந்நாள்ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விழா சிறப்பாக நடைபெறப் பங்களித்த அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன் மூலம் பள்ளிக்கும் அதன் முன்னாள் மாணவர்களுக்கும் இடையிலான அன்பும் பிணைப் பும் மேலும் வலுப்பெற்றது.

164-வது நிறுவனர் தினவிழா, நிறுவனர் சர் இராபர்ட் ஸ்டேன்ஸின் மகத் தான தொலைநோக்குப் பார்வையையும் நிலையான பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் அர்த்தமுள்ள நிகழ்வாகத் திகழ்ந்தது. கல்விச்சிறப்பு, நற்பண்புகளை வளர்த்தல் மற்றும் சமூகத்திற்குச் சேவைசெய்தல் ஆகியவற்றில் பள்ளி கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பையும் அதன் புகழ்பெற்ற வரலாற்றையும் இவ்விழா மீண்டும் நினை வூட்டி யது என்றால் மிகையாகாது.


ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி கல்விச்சிறப்பை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்நேரத்தில், நிறுவனர் தினக்கொண்டாட்டம், நிறுவனரின் உயரிய இலட்சியங்களைப் பின்பற்றவும், பெருமைமிக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், எதிர்காலத் தலைமுறையினர் வாழ்வில் மேலும் பல உயரங்களை அடைய ஊக்கமளிக்கவும் பள்ளி மீண்டும் உறுதிப்படுத்தியது.

படிக்க வேண்டும்

spot_img