தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 117 ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்
குமார் க.கிரியப்பனவர் நேற்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.கீதாஞ்சலி, இணை இயக்குநர் மரு.சுமதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பாலுசாமி, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.கண்ணதாசன், மாவட்ட இரத்த பரிமாற்ற அலுவலர் மரு.பிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது ஆட்சியர் பேசுகையில், ரத்த தானம் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றார்.
கடந்த 2025-ல் கோவை மாவட்டத்தின் நான்கு அரசு இரத்த மையங்கள் மூலம் 21,959 அலகு ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.



