உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (ஜி.கே.என்.எம்.) சார்பில், ‘சர்க்கரைக்கு இனி
அக்கறை காட்டுவோம்‘ என்ற தலைப்பில் 2 நாள் விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கியது.
மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இதில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உடல் நிறை குறியீடு, கண் மற்றும் நீரிழிவு பாத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவர்கள் சுந்தரராஜன், ராகவேந்திரா, சந்தோஷ் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கண்காட்சி காலை 9 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு நடைபெறுகிறது.



