Homeபிற செய்திகள்கோவை டிஜே அகாடமி ஆஃப் டிசைன் நடத்திய கருத்தரங்கம் - 40 கல்வியாளர்கள் பங்கேற்பு

கோவை டிஜே அகாடமி ஆஃப் டிசைன் நடத்திய கருத்தரங்கம் – 40 கல்வியாளர்கள் பங்கேற்பு

கோவை டிஜே அகாடமி ஆஃப் டிசைன் சார்பில், கல்வியாளர்களுக்கான புதுமை மற்றும் தலை மைத்துவ உச்சி மாநாடான ‘‘EDUFORGE 2026’ நடைபெற்றது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 25 பள்ளிகளில் இருந்து 40 கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
ஒருநாள் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒன்றிணைந்து, கல்வித் துறையில் உருவாகி வரும் புதிய நடைமுறைகள், கற்பித்தல் முறைகளில் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் எதிர்காலக் கல்விக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து வரவேற்புரையாற்றிய டிஜே அகாடமி ஆஃப் டிசைனின் கல்விப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் எம்.ராஜா, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியாளர்கள் தங்களது திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத் தினார். புதிய தொழில் நுட்பங்கள், புதுமையான கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் பல்துறை சிந்தனை களை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அகாடமியின் தொலை நோக்குப் பார்வை மற்றும் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து விளக்கிய அதன் முதல்வர் பேராசிரியர் ஆர்.வித்யாநாதன், படைப் பாற்றல் மிக்க சிந்தனை யாளர்களை உருவாக்கு வதிலும், வடிவ மைப்புக் கல்வி மூலம் சமூகத்திற்கு பயனுள்ள பங்களிப்புகளை வழங்குவதிலும் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகவும் கருத்தரங்க வளவாளராகவும், கொச்சி அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் காட்சித் தகவல் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் டாக்டர் தினேஷ் பாபு பங்கேற்றார். மாறிவரும் கல்விச் சூழல், புதுமைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் எதிர்காலக் கற்றல் முறைகளை எவ்வாறு மாற்றியமைக் கின்றன என்பது குறித்து அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் கல்வியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), அதிநவீன மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற கற்பித்தல் முறைகள் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன. வல்லுநர்களின் உரைகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை வகுப்பறைக் கற்றலில் எவ்வாறு பயன்படுத்தலாம், மாணவர்களின் படைப்பாற்றலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து பங்கேற்பாளர்கள் அறிந்துகொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, அகாடமி வளாகத்தில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சிக்கும் பங்கேற்பாளர்கள் அழைத்துச் செல்லப் பட்டனர். இதில் மாணவர்களின் வடிவ மைப்புப் படைப்புகள், புதுமையான திட்டங்கள் மற்றும் பல்துறை சார்ந்த ஆக்கங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இது அகாடமியின் அனுபவ அடிப்படையிலான மற்றும் பல்துறை வடிவமைப்புக் கல்வி அணுகுமுறையைப் பறைசாற்றுவதாக அமைந்தது. கருத்தரங்கின் ஏற்பாடுகளில் அகாடமியின் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முக்கியப் பங்காற்றினர்.

இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளில் வடிவமைப்புக் கல்வியை வழங்கி வரும் டிஜே அகாடமி ஆஃப் டிசைன், கல்வித்துறையுடன் தனது தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. கல்வியாளர்களிடையே அறிவுப் பரிமாற்றம், தொழில்முறை திறன் மேம்பாடு மற்றும் கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் தளமாக இதனை உருவாக்குவதுடன், எதிர்காலக் கல்வியில் புதிய வாய்ப்புகளை ஆராயவும் இந்நிகழ்ச்சி உதவும் என அகாடமி தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img