விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அயன்ரெட்டியபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தலைமையில் அடிக்கல் நாட்டினர்.

அமைச்சர் வன்னிஅரசு பேசுகையில், தான் படித்த பள்ளிக்கு ஆதிரை அறக்கட்டளை மூலம் சுற்றுச்சுவர் அமைப்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார். பெற்றோர் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமைச்சர் ஜெகதீஸ் வரி பேசுகையில், குழந்தை களுக்கு நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்த விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்றும், விருதுநகர் மாவட் டத்தின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



