அடுக்குமாடி குடியிருப்பு களில் குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலர்கள் மற்றும் முறையான வருகைப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
கோவை சுங்கம் ராமநாதபுரம் ஆதித்யா அடுக்குமாடிக் குடியிருப் போர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற குடும்ப விழா மற்றும் குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டத் தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வீட்டில் நகை, பணத்தைப் பாது காப்பாக வைக்கவும், குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், போதைப் பழக்கத்திலிருந்து அவர்களைத் தடுக்கவும் பெற்றோருக்கு அறிவுறுத் தினார்.
நிகழ்ச்சியில் ராமநாத புரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர் உமா ஆகியோர் பேசினர். சங்கத் தலைவர் ஆர்.பி. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகள், பெரியவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



