கோவை சாய் ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்தின் 6-வது பதவியேற்பு விழா புதிய விடியல் என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி விஜய் விக்னேஷ், கோயம்புத்தூர் சாய்சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் ஜெ. பாலாஜி, தலைவர் டாக்டர் ஆர். பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று, சேவை மனப்பான்மை மற்றும் தலைமைத்
துவத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
ரோட்டேரியன் சங்கரன், சேவைத் திட்டத்திற்குத் தேவையான எழுது பொருட்களை வழங்க முன்வந்தார்.
புதிய தலைவராக எம். சோமேஸ்வரன், செயலாளராக என். சுருதி மற்றும் புதிய நிர்வாகக் குழுவினர் பொறுப்பேற்றனர்.



