Homeபிற செய்திகள்மண் சரிவை முன்கூட்டியே கணிக்கும் சென்சார், நீரின்றி துணிகளுக்கு சாயமிடும் இயந்திரம் ஈரோடு பள்ளி மாணவிகள்...

மண் சரிவை முன்கூட்டியே கணிக்கும் சென்சார், நீரின்றி துணிகளுக்கு சாயமிடும் இயந்திரம் ஈரோடு பள்ளி மாணவிகள் கண்டுபிடிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண் காட்சியில் மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத் தினர். மாவட்டம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கண்காட்சியில் பங்கேற்றன.
மலைப்பகுதிகளில் மண்ணுக் குள் நீர் ஊடுருவும் ஆழத்தைக் கண்டறிந்து, மண்சரிவு ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் சென்சார் கருவியை ஈரோடு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பிரதிக்ஷா உருவாக்கியுள்ளார்.


கனமழையின்போது மண் ணுக்குள் அதிக அளவு நீர் ஊடுரு வுவதால் மண்ணின் கட்டமைப்பு வலுவிழந்து, மண் சரிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். இதைக் கண்காணிக்கும் வகையில், மண்ணுக்குள் நீர் ஊடுருவியுள்ள ஆழத்தை அளவிட்டு, மண் சரிவுக்கு வழிவகுக்கும் சூழலை முன்கூட்டியே கண்டறிய சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவி தெரிவித்தார்.
மேலும், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதிகளில் மலைச் சரிவுகளில் குறிப்பிட்ட வகை புற்களை வளர்ப்பதன் மூலம் மண்ணை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புற்களின் வேர்கள் மண்ணை இறுக்க மாகப் பிடித்துக் கொள் வதால் மண் அரிப்பைக் குறைத்து, மண் சரிவு ஏற்படும் அபாயத் தையும் குறைக்க உதவும் என அவர் கூறினார்.
சென்சார் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை அளிப்பதுடன், இயற்கை முறையில் மண்ணை நிலைப்படுத்தும் நடவடிக்கைகளை யும் இணைப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.


இதேபோல தண்ணீரைப் பயன்படுத்தாமல், அழுத்தப்பட்ட கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்தி துணிகளுக்கு சாய மிடும் வகையிலான இயந்திரத்தை ஈரோடு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மெஹவாஷ்னா உருவாக்கியுள்ளார்.
தற்போது வழக்கமான சாயப்பட்டறைகளில் துணிகளுக்கு சாயமிட அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சாய மிடும் பணிக்குப் பிறகு உருவா கும் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தி கரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், தண்ணீரின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும் வகையில் தனது இயந்திரம் வடி வமைக்கப்பட்டுள்ளதாக மாணவி தெரிவித்தார்.


அழுத்தப்பட்ட நிலையில் உள்ள கார்பன் டை ஆக்சைடை சாயமிடும் ஊடகமாகப் பயன்படுத்தி துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் வகையில் இயந்திரம் செயல்படுவதாக அவர் கூறினார்.
இதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும், சாயப்பட்ட றைகளில் தேவைப்படும் மனிதவ ளத்தையும் குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த முறையில் துணிகளுக்கு ஏற்றப்படும் வண்ணங்கள் எளிதில் மங்காமல் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் இருப்பதா கவும், பல்வேறு வகையான துணிக ளுக்கும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்து, கழிவுநீர் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் என்பதால், ஈரோடு போன்ற ஜவுளி மற்றும் சாயத்தொழில் அதிகம் நடைபெறும் பகுதி களில் இந்தக் கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி பள்ளி மாணவி கண்டுபிடித்த குறைந்த செலவில் குளிர்பதனக் கிடங்கு
விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்களை 5 முதல் 7 நாள்கள் வரை சேமித்து வைக்க உதவும் வகையில் குறைந்த செலவி லான குளிர்பதனக் கிடங்கு அமைப்பை ஈரோடு மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி நித்ஸ்ரீ உருவாக்கியுள்ளார். இதே பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவி ஹனியா பாத்திமா, வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்புக் கரு வியை உருவாக்கியுள்ளார்.


நித்ஸ்ரீ உருவாக்கியுள்ள குளிர் பதனக் கிடங்கில் மின்விசிறிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் பயன்படுத்தப்பட் டுள்ளன. வெளிப்புற வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்போது, கிடங்குக்குள் வெப்பநிலையை சுமார் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
அறுவடைக்குப் பின்னர் காய்கறிகள், பழங்கள் விரைவில் அழுகுவதால் ஏற்படும் இழப் பைக்குறைத்து, அவற்றை சில நாள்கள் சேமித்து வைக்க இந்த அமைப்பு உதவும் என மாணவி கூறினார்.
ஹனியா பாத்திமா உருவாக்கி யுள்ள வாகனப் பாதுகாப்புக் கருவி, விபத்துகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இரு மாணவிகளும் தங்களது கண்டுபிடிப்புகளின் செயல்பாடு மற்றும் பயன்பாடுகளை கண் காட்சிக்கு வந்தவர்களுக்கு விளக்கினர்.
மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் அன்றாடப் பிரச்னைகளுக்கான தொழில் நுட்பத் தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img