தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கோவை குற்றாலம் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவை தற்காலிகமாக மூட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று (07.10.2026) கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது என கோவை மாவட்ட வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைந்து, அருவியில் நீர்வரத்து பாதுகாப்பான அளவுக்கு குறைந்தால், சூழல் சுற்றுலாவை மீண்டும் நாளை திறப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



