கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 14 படுக்கைகள் கொண்ட நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட இப்பிரிவை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத் குமார் திறந்து வைத்தார்.

ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர், மருத்துவத் துறையின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய பிரிவின் சிகிச்சை வசதிகள் குறித்து தலைமை மருத்துவர் டாக்டர் சிவக்குமார் விளக்கினார். விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம்.சுகுமார், மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி, சி.ஓ.ஓ. மணி செந்தில் குமார், மார்க்கெட்டிங் பிரிவு சீனியர் பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



