கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஐந்திணை ’26’ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கமம் சுற்றுச்சூழல் மன்றம், உள்தர உறுதிப்பாட்டு அமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் மன்றம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கே. காளிதாசன், மாரிமுத்து யோகநாதன், கந்தசாமி சதாசிவம், எம். தமிழ்மாறன், ஆர். மணிகண்டன், பி. ஜே. பாலகுமாரன் ஆகியோர் முறையே இயற்கை, வனம், பறவைகள், மண், நீர் மற்றும் நெகிழி மாசுபாடு குறித்து பேசினர்.



