கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் த
பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. இலவச வீடு மற்றும் வீட்டுமனைப் பட்டா கோரி 354 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 2 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 204 மனுக்களும் என மொத்தம் 560 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர், குறித்த காலத்திற்குள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார் (வடக்கு), மாருதிபிரியா (தெற்கு), சமூக பாதுகாப்புத்திட்டம் (தனித்துணை ஆட்சியர்) வாணிலெட்சுமி ஜெகதம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



