உயர்கல்வி படிக்க பெற்றோர் தடையாக இருக்கக்கூடாது என்று பிளஸ்-2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் வகுப்பில் பயிற்சி மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வேண்டு கோள்விடுத்துள்ளார்.
அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வை திறம்பட எதிர்கொள்ளவும்,உயர்கல்வி வழிகாட்டுதல்களை பெறவும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விஷன் 1,500 பயிற்சி வகுப்பு கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் மாநில மற்றும் தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்கும் வகையில் கியூட், ஜே.இ.இ.போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்று அதிக மதிப்பெண் பெற பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும்,நுழைவு தேர்வுகள் இல்லாமல் பொதுத் தேர்வு அடிப்படையில் உயர் கல்வி பயில உள்ள மாணவர் களுக்கும் முக்கிய பாடப்பிரி வுகளான இயற்பியல், வேதியி யல், உயிரியல், கணிதம் ஆகிய வற்றில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
9 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சியாக புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் 470 மாணவிகளும், புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் 70 மாணவர்களும் என மொத்தம் 540 மாணவர்களம் பயன் பெற்றனர்.
பயிற்சி முடித்த மாணவர்களுக்கும், பாட பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புனித அன்னாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந் தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: -கடலூர் மாவட்டத்தில் 119 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6,320 மாணவர்களும், 7,521 மாணவிகளும் என மொத்தம் 13,841மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 1500 பேரை தேர்வு செய்து அவர்கள் முன்னணி நிறுவனத்தில் உயர்கல்வி பெறுவதற்கும், பல்வேறு வகையான போட்டித் தேர்வுக்கு தயார் படுத்திடும் வகையிலும் விஷன் 1500 திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும்.சில பெற்றோர்கள் தங்கள் குழந் தைகள் பிளஸ்-2 வரை படித் தால் போதும் என்று நினைக்கிறார்கள்.உயர்கல்வி படிக்க பெற்றோர் தடையாக இருக்கக்கூடாது. அவர்கள் படி ஏறி செல்வதை தடுக்கக்கூடாது. ஆசிரியர்கள் எதற்காக ஆலோசனை வழங்குகிறார்கள் என்பதை மாணவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக இருப்பார்கள். ஆகவே முறைப்படி கற்க வேண்டும். தொடர்ந்து லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும். முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.எல்லோரும் தனக்கான லட்சியத்தை நிர்ணயித்து அதை நோக்கி பயணித்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.முன்னதாக பயிற்சி குறித்து மாணவர்கள், பெற்றோர்கள்,தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தேவநாதன்,மாவட்ட கல்வி அலுவலர்கள் (கடலூர்) இஸ்மாயில்,(விருத்தாசலம்) சேகர் உள்பட கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



