கோவை மாவட்டம், ஆனைகட்டி சாலையில் மாங்கரை அருகே கோச் வேன் மற்றும் சைலோ கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.
ஆனைகட்டியில் இருந்து சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற கோச் வேன், முன்னால் சென்ற வாகனத்தை வலதுபுறமாக முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே கோவையில் இருந்து ஆனைகட்டி நோக்கி வந்த சைலோ கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சுமார் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவலறிந்த தடாகம் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் Traffic Regulation செய்து, வாகனப் போக்குவரத்தை சீர்செய்தனர்.
இச்சம்பவம் குறித்து தடாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



